சினிமாவில் நடிக்க மனைவிக்கு தடை போட்டார் நடிகர் திலீப்!!!

Sunday,28th of April 2013
சென்னை::மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு நடிகை மஞ்சு வாரியருக்கு அவரது காதல் கணவர் நடிகர் தீலீப் தடை போட்டுள்ளார். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் திலீப். இவர் நடிகை மஞ்சு வாரியரை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பின் மஞ்சு வாரியர் நடிப்புக்கு முழுக்குபோட்டார். இவர் நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவர். எனவே அதில் ஈடுபாடு காட்ட முடிவு செய்தார். இதுபற்றி திலீப்பிடம் கூறியபோது நடனம் ஆடுவதற்கு அனுமதி கொடுத்தார். இதையடுத்து சமீபத்தில் குருவாயூர் கோயிலில் நடன நிகழ்ச்சி நடத்தினார்.

இந்நிலையில் மஞ்சு வாரியருக்கு புதிய சினிமா ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நடிகர் திலீப், மீண்டும் சினிமாவில் நடிக்கக்கூடாது என்று மனைவிக்கு தடை விதித்தார். இதையடுத்து மீண்டும் நடிக்க வரும் எண்ணத்தை மஞ்சு வாரியர் கைவிட்டுள்ளார்.

Comments