தனுஷின் முதல் இந்திப் படம் ராஞ்சனாவுக்கு இந்தியில் டப்பிங் பேசியுள்ளார்!!!

Monday,22nd of April 2013
சென்னை::தனுஷுக்கு ஆங்கிலம் தகராறு. ஆற்றொழுக்காக வராது. அதற்காக நம்மைப் போல் கூச்சப்பட்டு ஒளியாமல் தைரியமாக தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசி, தற்போது அரை கிணறு தாண்டியிருக்கிறார். இதை எதற்கு குறிப்பிடுகிறோம் என்றால் அவரின் மொழி மீதான தன்னம்பிக்கையை எடுத்துக்காட்ட.
 
தனுஷின் முதல் இந்திப் படம் ராஞ்சனாவுக்கு யார் குரல் தருவார்கள் என்பது குழப்பமாக இருந்தது. படப்பிடிப்பின் போது இந்தியை கற்று தனுஷை தனது கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசி அனைவரையும் அசத்தியிருக்கிறார்.
 
ராஞ்சனாவின் படப்பிடிப்பு முடிந்து மும்பையில் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. தனுஷ் தனது கதாபாத்திரத்துக்கு இயக்குனர் ஆனந்த் ராய் மெச்சும் அளவுக்கு சரளமான இந்தியில் டப்பிங் பேசியுள்ளார்.
ஜுன் மாதம் படம் திரைக்கு வருகிறது.

Comments