சேரனின் ‘கை கொடுக்கும் கை’!!!சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற பெயரில் புதுபடத்தை இயக்குகிறார்!!!

 
Monday,22nd of April 2013
சென்னை::இது என்ன சேரன் இயக்கும் அடுத்த படத்தோட தலைப்பான்னு யாரும் நினைச்சிடாதீங்க…
சேரன் அடுத்தவங்களுக்கு உதவறதுக்காக ஆரம்பிச்சிருக்கிற ஒரு விஷயம்தான் இந்த ‘கை கொடுக்கும் கை’.
 
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் சேரன் www.directorcheran.com என்ற இணையதளத்தை புதிதாக ஆரம்பித்திருக்கிறார். இந்த இணையதளத்தில் அவர் இயக்கிய படங்களைப் பற்றியும், தயாரித்த படங்களைப் பற்றியும், நடித்த படங்களைப் பற்றியும், தற்போது பணியாற்றி வரும் படங்களைப் பற்றியும் தகவல்கள் அடங்கியுள்ளன.
 
அதோடு ஒரு பக்கத்தில் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கை கொடுக்கும் கை’ என்ற  பதிவு செய்யும் விதத்தில் அமைந்துள்ள ஒரு பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.
படிப்பு, மருத்துவம் போன்ற உதவி தேவைப்படுபவர்கள் தகுந்த ஆதாரத்துடன் அதில் பதிவு செய்து சமர்ப்பித்தால் அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய சேரன் தயாராக இருக்கிறார்.
 
என் படங்களில் நடிக்க நடிகர்கள் மறுப்பு: டைரக்டர் சேரன் வருத்தம்!
 
சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற பெயரில் புதுபடத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யாமேனன் மற்றும் சந்தானம் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இதில் சேரன் பேசியதாவது:-

‘ஆட்டோ கிராப்’ படத்தில் நடிக்க பலரை அணுகி அவர்கள் மறுத்ததால் கோபத்தில் நானே நடித்தேன். ‘தவமாய் தவமிருந்து’, ‘பொக்கிஷம்’, சமீபத்தில் ரிலீசான ‘சென்னையில் ஒருநாள்’ வரை பல படங்களில் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்குள் படம் இயக்க வேண்டும் என்ற அரிப்பு இருந்தது. எனவே ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை டைரக்டு செய்ய வந்துள்ளேன்.

நான் பார்த்த பல சம்பவங்களின் பாதிப்பே இந்த படம். இந்த கால இளைஞர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கும். காமெடிக்கு சந்தானத்தை வைத்துள்ளோம். இந்த படத்தை ஆரம்பிக்கும்போது பல நடிகர்கள் பிசியாக இருந்தனர். இன்னும் சில நடிகர்களுக்கு இந்த படத்தில் நடிக்க உடன்பாடு இல்லை. கதையை கேட்காமலேயே நிராகரித்து விட்டனர்.

‘ஆட்டோகிராப்’பை ஆரம்பித்தபோது வந்ததுபோல் கோபம் வந்தது. சர்வானந்த் கதைக்கு பொறுத்தமாக இருந்தார் என்று அணுகி கதை சொன்னேன். கதை கேட்டதும் கண்டிப்பாக நடிக்கிறேன் எனறார். நித்யா மேனனும் கதையை கேட்டு ஒப்புக் கொண்டார். நாயகியை நாயகன் தவறாக பார்க்காத கதை. படம் முழுவதையும் முடித்து விட்டோம். என் முந்தைய படங்களைவிட இது வேறு மாதிரி மாடர்ன் ஆக இருக்கும்.

இவ்வாறு சேரன் பேசினார்.

படத்தின் இசையமைப் பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் சித்தார்த் ஆகியோரும் பேசினர்.
 

Comments