Sunday,7th of April 2013
சென்னை::மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி மலையாளம், தமிழில் எடுக்கப்படும் ‘நடிகையின் டைரி’ படத்தில் நாயகியாக சனா கான் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
டிரைலரும் இடம் பெற்ற வசனங்களும் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. “ நடிக்கிறதுக்கு திறமை மட்டும் இருந்தால் போதாது…புரொடியூசருக்கு ………………..கொடுக்கணும்னு இப்பதான்டா எனக்கு தெரியுது…” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த வசனத்தை எழுதியிருப்பவரும் ஒரு பெண்மனிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாலினி, அசின் போன்றோருக்கு டப்பிங் குரல் கொடுப்பவரான ஸ்ரீஜா ரவி இந்த படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார்.
விழாவில் கலந்து கொண்ட சனா கான் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார், அதிலிருந்து….
சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க முடிவானவுடன் அவர் நடித்த படங்கைளை இணையதளங்களில் தேடிப் பிடித்துப் பார்த்தேன். அவருடைய முக பாவம், உடல் மொழி ஆகியவற்றைப் பார்த்து அதே போல் நடிக்க முயற்சித்தேன்.
சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்தது போன்று என் வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்பேயில்லை. நான் மிகவும் தைரியமான பெண், எந்த ஒரு ஆணாலும் என்னை சஞ்சலப்படுத்த முடியாது. என்னால்தான் ஆண்களுக்கு பாதிப்பு வரும். யாருடைய ஆதரவும் இல்லாமல் என்னால் சொந்த காலில் நிற் க முடியும்.
சில்க் ஸ்மிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அது எப்படி இருந்தாலும் அவருடைய மரணம் திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்புதான்.
சினிமாவில் வாய்ப்புகளைப் பெறுவதற்காக செக்ஸ் உடன்பாடு செய்து கொள்வதாகக் கேள்விப்பட்டுள்ளேன். அது அவரவர் தனிப்பட்ட விஷயம். ஆனால், என் வாழ்க்கையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் உறுதியான, தைரியமானவள், பட வாய்ப்புககாக எதையும் செய்ய மாட்டேன், ” என தெரிவித்தார்.
நடிகையின் டைரி’ டிரைலர் வெளியீடு நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர் அனில், நாயகி சனா கான், நிர்வாக தயாரிப்பாளர் ஆதி ராம், வசனம் எழுதிய ஸ்ரீஜா ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment