Monday,29th of April 2013
சென்னை::பட்டத்து யானை' படப்பிடிப்பில் ஐஸ்வர்யா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை::பட்டத்து யானை' படப்பிடிப்பில் ஐஸ்வர்யா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலைக்கோட்டை' திரைப்படத்திற்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் 'பட்டத்து யானை'. இந்த படத்தை மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
விஷால் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து சந்தானம், ஜெகன், மயில்சாமி, மனோபாலா, காதல் சுகுமார், கிருஷ்ணமூர்த்தி, பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இப்போது திருச்சியில் படமாக்கப்பட்டு வருகின்றன. 7 நாட்களாக கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடைபெறுவதால், கதாநாயகி ஐஸ்வர்யா மிகவும் சிரமப் படுகிறாராம்.
அண்மையில் விஷால் - ஐஸ்வர்யாவை, வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது கொளுத்தும் வெயிலில் ஓடிய ஐஸ்வர்யா திடீரென்று மயங்கி விழுந்தார். மகள் நடிப்பதைப் பார்ப்பதற்காக திருச்சி சென்றிருந்த அர்ஜூன் பதறியபடி மகளை தூக்கினாராம். உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனையடுத்து ஐஸ்வர்யா தொடர்புடைய காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டதாக படத்தின் இயக்குநர் பூபதி பாண்டியன் தெரிவித்தார்.
Comments
Post a Comment