மகனுக்கு வாய்ப்பை விட்டுகொடுத்த தேவா!!!

Friday,5th of April 2013
சென்னை::வான்மதி', 'காதல் கோட்டை', 'காலமெல்லாம் காதல் வாழ்க', 'வெற்றிக் கொடிகட்டு' உள்ளிட்ட 11 திரைப்படங்களை தயாரித்திருக்கும் சிவசக்தி பாண்டியன், தனது எஸ்.எஸ்.மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மூலம் 12வதாக தயாரித்துள்ள படம் 'அர்ஜூனன் காதலி'.
 
 ஜெய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக பூர்ணா நடித்துள்ளார் பார்த்தி பாஸ்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். சிவசக்தி பாண்டியன் தயாரித்த 11 படங்களுக்கும் இசையமைத்த தேவா, 'அர்ஜூனன் காதலி' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தனது மகனும், பிரபல இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவாவுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில் அர்ஜூனன் காதலி படக்குவினர் அனைவரும் கலந்துகொள்ள, இசையமைப்பாளர் தேவா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார்.

Comments