Thursday,11th of April 2013
சென்னை::தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் காஜல் அகர்வால், சமந்தா.
இவர்கள் இருவருக்கும் பலத்த போட்டி நிலவுவதாக தெலுங்கு மீடியாக்கள் கடந்த சில வாரங்களாக கூறி வந்தன.
காஜல் அகர்வால் நடித்து சமீபத்தில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் காஜல் அகர்வால்.
அப்போது அவர் தனக்கும், சமந்தாவுக்கும் எந்த போட்டியும் இல்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “ தற்போது பிஸியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காதல் புரிவதற்கெல்லாம் துளி கூட நேரமில்லை. திருமணத்தைப் பற்றியெல்லாம் இதுவரை யோசிக்கவேயில்லை.
எனக்கும் சமந்தாவுக்கும் இடையே எந்த போட்டியுமில்லை. அப்படியே எங்களுக்குள் போட்டி வந்தாலும் அது ஆரோக்கியமானதாகவே இருக்கும், ” என்றார்.
காஜல் அகர்வால் தற்போது விஜய்யுடன் ‘ஜில்லா’ படத்திலும், கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்து வருகிறார்.
Comments
Post a Comment