கௌதம் நடிக்கும் ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’…!!!

Wednesday,17th of April 2013
சென்னை::கடல்’ படத்தின் ரிசல்ட் தோல்வியில் முடிந்தாலும் இன்றைய தேதியில் தமிழ் திரையுலகில் இளமையான நாயகனாக இருப்பவர் கௌதம் மட்டுமே.
அதனால்தான் ‘கடல்’ தோல்வியடைந்தாலும் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் ‘புக்’ ஆகியுள்ளன.
 
ஏற்கெனவே, ‘சிலம்பாட்டம்’ சரவணன் இயக்கும் படத்தில் நாயகனாக ஒப்பந்தமானார். தற்போது ‘3’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ படத்திலும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
‘சிலம்பாட்டம்’ சரவணன் இயக்கும் படத்திற்கு ‘சிப்பாய்’ என்று பெயரிட்டுள்ளார்கள். இதே பெயரில் பல வருடங்களுக்கு முன் ஒரு டப்பிங் படம் திரைக்கு வந்துள்ளது.
‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’ இரண்டு படங்களுக்கும் இசையமைக்கப் போகிறவர் யுவன்ஷங்கர் ராஜா.
 
‘சிப்பாய்’ படத்தில் கௌதம் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். ‘வை ராஜா வை’ படத்தின்  ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது.
மற்ற விவரங்கள் விரைவில்…

Comments