ஸ்ரீதேவி, கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், உள்ளிட்டோருக்கு, ஜனாதிபதி வழங்கினார் "பத்ம' விருதுகள்!!!
Saturday,April 06,2013
புதுடில்லி:::நடிகை ஸ்ரீதேவி, கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்,
உள்ளிட்டோருக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று, பத்ம விருதுகளை வழங்கினார்.
பல்வேறு துறைகளில், சாதனை புரிந்தோருக்கு,
மத்திய அரசு, ஆண்டு தோறும், பத்ம விருதுகளை வழங்குகிறது. இந்தாண்டுக்கான பத்ம விருதுகள், 108 பேருக்கு, கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. இதில், முதல் கட்டமாக, 54 பேருக்கு, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், நேற்று விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி
விருதுகளை வழங்கினார். சிற்பி ரகுநாத் மொகாபாத்ரா, அறிவியலாளர் யஷ்பால்
ஆகியோருக்கு, பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர், வி.கே.சரஸ்வத், நடிகை ஷர்மிளா தாகூர், கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், தமிழகத்தை சேர்ந்த, ராமமூர்த்தி தியாகராஜன் (தொழில் துறை) உட்பட, 10 பேருக்கு, பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. நடிகை ஸ்ரீதேவி, ஜப்பானை சேர்ந்த, பேராசிரியர் நூப்ரு கரோசிமா, தமிழகத்தை சேர்ந்த, எஸ்.லட்சுமி நாராயணா (கலை, எஸ்.கே.எம்., மயிலானந்தன் (சமூக சேவை), ராஜ்ஸ்ரீ பதி (தொழில் துறை) மற்றும் திருச்சூர் விஸ்வநாதன் தேவராஜன் (மருத்துவம்), உட்பட, 42 பேருக்கு, பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.மீதமுள்ளவர்களுக்கு, மற்றொரு நாளில், விருதுகள் வழங்கப்படும் என்றும், அதற்கான தேதி, விரைவில் அறிவிக்கப்படும் என்றும், ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments
Post a Comment