ஹன்சிகாவின் தொழில் ரகசியம்: தற்போது ஏழு படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா!!!

 
Wednesday,3rd of April 2013
சென்னை::தற்போது ஏழு படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. மொத்த கால்சீட்டாக எந்த படத்திற்கும் கொடுக்காமல், நான்கு நாள், ஐந்து நாள் வீதம் கொடுத்து நடித்து வருகிறார். இதனால் யாருமே அவர் மீது அதிருப்தி அடையாமல் அவர் கால்சீட் கொடுப்பதற்கேற்ப படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். அதேபோல், படாதிபதிகள் சம்பள விஷயத்திலும் தன் மீது அதிருப்தி கொள்ளக்கூடாது என்றும் சில தொழில் ரகசியங்களை கடைபிடித்து வருகிறார் ஹன்சிகா.
அதாவது, ஆளைப்பார்த்து கம்பெனியைப்பார்த்து சம்பளம் வாங்குகிறார். குறிப்பாக, நல்ல கதை நல்ல டைரக்டர் படம் என்றால், சம்பள விசயத்தில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார். ஆனால், பிரபல கம்பெனி, பிரபல ஹீரோ படமென்றால் சம்பளத்தை தூக்கலாகவே கேட்கிறார். காரணம், பெரிய ஹீரோ படங்கள் என்கிறபோது தனக்கு பர்பாமென்ஸ் ரீதியாக பெரிய அளவில் எதுவும் இருக்காது. பாடல் காட்சிகளில் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே ஆட விடுவார்கள் என்பதால், நடிப்பில் திருப்தி கிடைக்காது, பணமாவது திருப்தியாக இருக்கட்டுமே என்றுதான அப்படி கேட்கிறாராம்.

ஆனால், மீடியம் பட்ஜெட் கம்பெனி, மீடியமான ஹீரோ படங்கள் என்கிறபோது, கதையில் தனக்கு முக்கியத்துவம் தருவார்கள் என்பதால், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்கிறாராம். பட்ஜெட் நிலவரத்தை சொல்லி, இந்த சம்பளம்தான் தர முடியும் என்று படாதிபதிகளை ஓப்பனாக பேசினால், முழுமனதோடு நடித்துத்தர சம்மதிக்கிறாராம் ஹன்சிகா. இதனால் அனைத்துதரப்பு சினிமாக்காரர்களிடமும் தற்போது நல்ல நடிகை என்ற பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார் ஹன்சிகா.

Comments