கதைக்கு சிக்ஸ்பேக் தேவைப்பட்டது - பரத்!!!


Tuesday,30th of April 2013
சென்னை::அனைவரையும் தனது அட்டகாசமான உடலமைப்பால் ஆச்ச‌ரியப்படுத்தியிருக்கிறார் பரத். நல்ல கொழுக்கட்டை சைசில் மசிலேயில்லாமல் இருந்தவர் இப்போது சிக்ஸ்பேக்கில். அதுவும் பாடி பில்டர்களைப் போல ஒவ்வொரு தசையும் முறுக்கிக் கொண்டு. அவரது புதிய தோற்றத்துக்குப் பின்னே அவரது கடும் உழைப்பும், ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியும் பளிச்சென்று தெ‌ரிகிறது.
 
555 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அவரது கெட்டப் பல மடங்கு அதிக‌ரித்திருக்கிறது.
 
படத்தின் பிரஸ்மீட்டில் பரத்தின் பேச்சு உங்களுக்காக.555 படத்தோட ஆடியோ ‌ரிலீஸுக்கு அப்புறம் எப்படி ஃபீல் பண்றீங்க...?
 
உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். ஆடியோ ‌ரிலீஸுக்கு பெ‌ரிய பெ‌ரிய ஆட்களெல்லாம் வந்தாங்க, மேடையில வாழ்த்துனாங்க. குறிப்பா என்னோட குருநாதர் ஷங்கர் சார். படத்தோட சாங், ட்ரெய்லர் பார்த்துட்டு ஒரு க‌ஜினி, ஒரு அந்நியன் பார்க்கிற எஃபெக்ட் இருக்குன்னு பாராட்டிச் சொன்னது ரொம்ப என்கரே‌ஜிங்கா இருந்தது.
 
555 எப்படிப்பட்ட படம்?
 
என்னோட கே‌ரியர்ல இது ரொம்ப முக்கியமான படம். பரத்தை வேறொரு கோணத்தில் காட்டப் போற படம். ட்ரெய்லர் பார்த்திருப்பீங்க... சாங்ஸ் பார்த்திருப்பீங்க. முந்தைய பரத்துக்கும் இந்த பரத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் தெ‌ரிஞ்சிருக்கும்.

Comments