எல்லா அம்மாக்களுக்குமான படம் ‘கங்காரு’ – சர்ச்சை இயக்குனர் சாமி!!!

Sunday,21st of April 2013
சென்னை::உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ என சர்ச்சைக்குரிய படங்களையே  இயக்கி பரபரப்புக்குள்ளாகிய இயக்குனர் சாமியின் அடுத்த படம் ‘கங்காரு’.
‘கங்காரு’ படத்தில் புதுமுகங்கள் அர்ஜுனா, பிரணயா, சுப்ரியா மற்றும் தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு,  மற்றும் பல புதிய முகங்களும் நடிக்கின்றனர்.
 
கதையை இயக்குனர் சாமியின் உதவியாளர் எஸ்.டி. சாய்பிரசாத் எழுதியிருக்கிறார். பாடகர் ஸ்ரீனிவாஸ் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
 
ஒளிப்பதிவு – ராஜரத்தினம்,  கலை – தோட்டாதரணி , நிர்வாகத் தயாரிப்பு – பி. பாஸ்கர்ராஜ், தயாரிப்பு நிர்வாகம் –  நமஸ்காரம் சரவணன்.  தயாரிப்பு வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் – சுரேஷ் காமாட்சி, எஸ். ரவிச்சந்திரன், திரைக்கதை ,வசனம், இயக்கம் –   சாமி.
படத்தைப் பற்றி இயக்குனர் சாமி கூறியதாவது,
 
வாழ்கையில சந்தோஷம், துக்கம், அழுகை, சிரிப்பு, பாசம்னு ஏதோ  ஒரு விஷயத்தை தெரிஞ்சோ தெரியாமலோ,  விரும்பியோ விரும்பாமலோ சுமந்துகிட்டுதான் திரியறோம். அப்படி மனசாலும், உடம்பாலும் ஒரு ஜீவனை இன்னொரு ஜீவன் வாழ்நாளெல்லாம் சுமந்து திரிவதுதான் ’கங்காரு’’.
சிந்து சமவெளி படத்துக்காக சமூக ஆர்வலர்களும், சமுதாயக் காவலர்களும் என் வீட்டை, காரை அடித்து நொறுக்கினார்கள். அந்த சமயத்துல எங்கம்மா ஏம்பா இப்படி நடக்குது? குடும்பத்தோட உக்கார்ந்து  பார்க்குற மாதிரி ஒரு படம் எடுக்கக்கூடாதான்னு கேட்டாங்க.  இதோ  தமிழ் நாட்டுல உள்ள அம்மாக்களுக்கு  மட்டுமல்ல, உலகம் முழுக்க உள்ள எல்லா அம்மாக்களுக்கும்,  என் அம்மாவுக்காகவும் சேர்த்து ஒரு படம் எடுக்குறேன். அது இந்த ‘கங்காரு’. தாய்ப்பாசத்துக்கு அதிக பட்ச உதாரணம் ‘கங்காரு”, என்கிறார் இயக்குனர் சாமி.
ஏப்ரல் இறுதியில் கொடைக்கானலில் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடக்கிறது.

Comments