மீண்டும் ஒன்று சேறும் பாஹத் - ஆண்ட்ரியா - விரைவில் திருமணம்?!!!

Monday,29th of April 2013
சென்னை::எங்குப் போனாலும் காதலும், கலவரமும் என்று நடிகை ஆண்ட்ரியா பிரபலமடைகிறார். முதலில் இயக்குநர் செல்வராகவனுடன் காதல் என்று கிசு கிசுக்கப்பட்டவர், பிறகு இசையமைப்பாலர் அனிருத்துடன் காதல் கொண்டார். இதற்கு சாட்சியாக இருவரும் முத்தமிடும் புகைப்படம் உலகமெல்லாம் வெளியாகி உலா வந்தது.

இதற்கிடையில், அந்த தருணங்களை நினைத்து வேதனை அடைகிறேன் என்று கூறிய ஆண்ட்ரியாவுக்கும், மலையாள இயக்குநர் பாசிலின் மகன், பாஹத் பாசிலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக, மலையால திரையுலகில் செய்திகள் வெளியாகின. பாஹத் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பேட்டி ஒன்றி வெளிப்படையாகவே கூறினார். ஆனால், இதை மறுத்த ஆண்ட் ரியா அவரை நான் காதலிக்கவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் பகாத்தும், ஆண்ட் ரியாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள். 'நார்த் 24 காதம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ராதாகிருஷ்ண மேனன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், ஆண்ட் ரியாவும், பஹாத்தும் மீண்டும் இணைந்து நடிப்பதால், அவர்களுடைய காதல் உறுதி செய்யப்பட்டது என்றும், இப்படம் முடிந்தவுடன் அவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்றும் மலையால சினிமாவில் கிசு கிசுக்கப்படுகிறது....

ஆண்ட்ரியா தமிழ், தெலுங்குடன் மலையாளத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இவரின் முதல் மலையாளப் படம் அன்னாயும் ரசூலும். சமீபத்தில் வெளியான இப்படம் சூப்பர்ஹிட்டானது.

இந்தப் படத்தில் நடித்த போது ஆண்ட்ரியா குறித்து எதுவும் மனதில் தோன்றிவில்லை என்றும், டப்பிங் பணிகளுக்காக சென்னை சென்று, படக்காட்சிகளை பார்த்த போது ஆண்ட்ரியா மீது தான் காதல் வசப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் பகத் பாசில் தெரிவித்தார். பகத் பாசில் இயக்குனர் பாசிலின் மகன்.

தனது காதலை வெளிப்படையாக அறிவித்த பகத் பாசில் ஆண்ட்ரியா தன்னை காதலிப்பதாகவோ, காதலிக்க வேண்டும் என அவரிடம் கேட்டதாகவோ கூறவில்லை. ஆனால் சிலர் இதனை திரித்து பகத் பாசிலும், ஆண்ட்ரியாவும் காதலிப்பதாக எழுதினர். இதனை ஆண்ட்ரியா மறுத்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் வைத்து புதுப்படம் ஒன்றை தொடங்கும் முடிவில் இருக்கிறார் இயக்குனர் ராதா கிருஷ்ணமேனன். படத்தின் நடிகர்கள் மற்றும் பிற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. காதல் சர்ச்சையில் சிக்கிய இருவர் மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளனர் என்ற செய்தியின் காரணமாக பகத் பாசிலும், ஆண்ட்ரியாவும் திருமணம் செய்து கொள்வார்கள் என மீடியாக்கள் செய்தி சொல்லி வருகின்றன.

அப்படியும் நடந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது.

 
 

Comments