சுசீந்திரன் இயக்கத்தில், சொந்த தயாரிப்பில் விஷால்!!!

Friday,5th of April 2013
சென்னை::செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஷால் தொடர்ந்து திமிரு, சண்டக்கோழி போன்று அதிரடி ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டுள்ளார்.
 
ஏற்கனவே இவரது குடும்பத்தின் சார்பில் தயாரிப்பு நிறுவனம் உள்ள நிலையில் நடிகர் விஷால் இப்போது சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். தன்னுடைய முதல் சொந்த படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார்.
 
வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களை இயக்கிய சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார். விஷால் ஜோடியாக கும்கி, சுந்தரபாண்டியன் படங்களின் ஹீரோயின் லட்சுமி மேனன் நடிப்பார் என தெரிகிறது. தற்போது சுசீந்திரன் ஆதலால் காதல் செய்வீர் படத்திலும், விஷால் பட்டத்து யானை படத்த‌ிலும் பிஸியாக இருப்பதால் இருவரும் அவரது படங்களை முடித்துக்கொண்டு இந்த புதிய படத்தில் இணைவார்கள் எனத் தெரிகிறது. விரைவில் இப்படம் பற்றிய முழு அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments