Saturday,27th of April 2013
சென்னை::ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் பரத் பாலா இயக்கத்தில் ஏஆர். ரகுமான் இசையமைப்பில் தனுஷ், பார்வதி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மரியான்’.இப்படத்தின் டீஸரும், புகைப்படங்களும் நிச்சயம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த எதிர்பார்ப்பில் மேலும் ஒரு விஷயமாக, ஏ.ஆர். ரகுமான் இசையில் தனுஷ் எழுதிய பாடல் ஒன்றை யுவன்ஷங்கர் ராஜா முதன் முறையாக பாடியிருக்கிறார். இது அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.
இது குறித்து யுவன் கூறுகையில் “ஏஆர். ரகுமான் இசையில் ஒரு அற்புதமான பாடல் பாடியிருக்கிறேன்” என்றார்.
Comments
Post a Comment