Wednesday,24th of April 2013
சென்னை::அவள் பெயர் தமிழரசி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நந்தகி. தற்போது இவருடைய பெற்றோர் வைத்த பெயரான மனோசித்ரா என்பதையே சினிமாவுக்காகவும் மாற்றிக் கொண்டு விட்டார்.
நேற்று இன்று’ படத்தில் நாயகியாக நடித்து வரும் இவர், தற்போது அஜித் , சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பெற்றோர் வைத்த பெயரையே வைத்த நேரம் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என பெருமையாகச் சொல்கிறார் மனோ சித்ரா.
Comments
Post a Comment