காதலை சொன்ன ஹீரோவுடன் மீண்டும் நடிக்க ஆண்ட்ரியாவுக்கு அழைப்பு!!!

Tuesday,23rd of April 2013
சென்னை::ஆண்ட்ரியாவை காதலிப்பதாக ஹீரோ பஹத் பாசில் கூறினார். அதை ஆண்ட்ரியா ஏற்காத நிலையில் மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.மலையாளத்தில் வெளியான ‘அன்னயும் ரசூலும்‘ படத்தில் பஹத் பாசில், ஆண்ட்ரியா நடித்தனர். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. கடந்த மாதம் சென்னை வந்த பஹத் பாசில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஆண்ட¢ரியாவை காதலிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி ஆண்ட்ரியாவிடம் கேட்டபோது பஹத் காதலை ஏற்க மறுத்தார். இந்நிலையில் இவர்களை மீண்டும் ஜோடியாக நடிக்க வைக்க ஏற்பாடு நடக்கிறது.விளம்பர படங்களை இயக்கிய அனில் ராதாகிருஷ்ணன் என்பவர் ‘நார்த் 24 காதம்‘ என்ற மலையாள படத்தை இயக்க உள்ளார். இதில் பஹத், ஆண்ட்ரியா இருவரையும் மீண்டும் ஜோடி சேர்க்க முயன்றுவருகிறார். இருவருக்கும் இடையே காதல் கிசுகிசு இருப்பதால் அது படத்துக்கு பலமாக இருக்கும் என்று அவர் எண்ணுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி அனில் கூறும்போது,‘கடந்த நவம்பர் மாதம் ஆண்ட்ரியாவை சந்தித்து என்னுடைய ஸ்கிரிப்ட் பற்றி சொன்னேன். அதேபோல் பஹத்திடம் கதை கூறி இருக்கிறேன். ஒரு பயணத்தின்போது நடக்கும் கதையாக இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் இணைந்து நடிப்பதுபற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை‘ என்றார்.

Comments