விளையாட்டு வீரனின் கதை ‘எதிர் நீச்சல்!!!


Friday,26th of April 2013
சென்னை::தனுஷ் தயாரிக்கும் முதல் படமான ‘எதிர் நீச்சல்’ படத்தில் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த், ‘அட்ட கத்தி’ நந்திதா மற்றும் பலர் நடிக்கிறார்கள். துரை செந்தில் குமார் படத்தை இயக்க அனிருத் இசையமைக்கிறார்.
 
தனுஷின் முதல் தயாரிப்பு, அனிருத்தின் இரண்டாவது படம் என்ற எதிர்பார்ப்புடன் இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
படத்தைப் பற்றி இயக்குனர் துரை செந்தில்குமார் கூறுகையில், “ இந்த படம் ஒரு விளையாட்டு வீரனைப் பற்றிய கதை. மூன்று பெண்களுக்கு இடையில் அவன் எப்படி அவனுடைய லட்சியத்தை அடைகிறான் என்பதை அனைவரும் ரசிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறோம். வாழ்க்கைய பாசிட்டிவா அப்ரோப்ச் பண்ணால் ஜெயிக்க முடியும்கறத சொல்லியிருக்கோம்.
 
சிவ கார்த்திகேயன் விளையாட்டு வீரராகவும், நந்திதா விளையாட்டு வீராங்கனையாகவும், பிரியா ஆனந்த் டீச்சராகவும் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் , நயன்தாரா சிறப்புத் தோற்றமாக ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்கள். இதற்காக நயன்தாரா எந்த சம்பளமும் வாங்கவில்லை. உடைகளைக் கூட அவரே டிசைன் செய்து எடுத்துக் கொண்டு வந்தார்.
 
நிச்சயம் இன்றைய டிரென்டுக்கு படம் இருக்கும் ,” என்றார்.
 

Comments