கமலின் முத்தம் - கச்சை கட்டிய காவி கட்சி!!!

Thursday,25th of April 2013
சென்னை::உலக நடப்புகள் போர் அடிக்கும் போது அதனை குதூகலமாக மாற்ற கடவுள் கண்டு பிடித்த கட்சி, இந்து மக்கள் கட்சி. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மாதி‌ரி தோண்டியெடுத்து ஏதாவது வழக்கை கொண்டு வருவார்கள். இந்த என்டர்டெயின்மெண்ட் கட்சி சார்பில் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று தரப்பட்டது.
 
 விஜய் தொலைக்காட்சியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கமல், கௌதமியுடன் கலந்து கொண்டார். ஒவ்வொரு கேள்விக்கும் தனக்கேயு‌ரிய இன்டலெக்சுவல்தனத்துடன் பதிலளித்தார். ப‌ரிசுத் தொகை 50 லட்சங்கள். அதனை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கு தந்தார். அவர்களின் நலனுக்காகதான் அவர் அந்த ஆட்டத்தில் கலந்து கொண்டதே.
நிகழ்ச்சியை சுவாரஸியப்படுத்த பிரபலங்கள் சிலரும் கமலிடம் கேள்விகள் கேட்டனர், உரையாடினர். அதில் இரண்டு பேர் கமலை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் வாங்கிக் கொண்டனர். நிகழ்ச்சியை பார்த்த மொத்த தமிழகமும் கமலின் துறைசார் அறிவையும், கேன்சரையும் பற்றி பேசிக் கொண்டிருக்க நமது என்டர்டெயின்மெண்ட் கட்சிக்கு இந்த கட்டிப்பிடி விஷயம் கண்ணை உறுத்தியது. கலாச்சாரம் கெடுகிறது என கமிஷனர் அலுவலகம் வந்து கடுதாசி தந்திருக்கிறார்கள்.
இவிங்க காமெடிக்கு ஒரு அளவேயில்லையா.

Comments