அமெரிக்காவுக்கு பறக்கிறார் தமன்னா!!!

Thursday,25th of April 2013
சென்னை::கோடை காலம் வந்தாலும் வந்தது, நடிகைகள், இந்தியாவை விட்டு, குளிர் பிரதேசங்களுக்கு ஓட்டம் பிடிக்க துவங்கியுள்ளனர். நடிகைகளுக்கு, அழகு தான், முக்கியமான விஷயம். இங்கு அடிக்கும் வெயிலில், தங்கள் அழகிற்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அப்புறம் எப்படி வாய்ப்பு கிடைக்கும். எனவே, சுற்றுலா என்ற பெயரில், வெளிநாடுகளுக்கு பறக்கின்றனர்,
 
நடிகைகள். இந்த பட்டியலில் லேட்டஸ்ட்டாக இடம் பெற்றிருப்பது, பாலிவுட், கோலிவுட் ரசிகர்களால், மெழுகுச் சிலை என, புகழப்படும், தமன்னா.விரைவில், தன் குடும்பத்துடன், அமெரிக்காவுக்கு பறக்க போகிறார், அவர். அங்கு மூன்று வாரம், ஆசை தீர, ஹாலிவுட் ஸ்டூடியோ, டிஸ்னி லேண்ட், ஸ்கை ரிசர்ட் என, சுற்றிப் பார்த்து, ஆட்டம் போட்டு விட்டு தான், இந்தியா திரும்புவாராம்.
 
இதுபற்றி, தமன்னாவிடம் கேட்டால்,"இந்த சுற்றுப் பயணம், ஏற்கனவே திட்டமிட்டது. அந்த நேரத்தில், ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததால், சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டேன். இப்போது, கேப் கிடைத்துள்ளது, அமெரிக்காவுக்கு ஜூட் விட வேண்டியது தான் என, உற்சாகம் பொங்க பேசுகிறார், தமன்னா.

Comments