Friday,5th of April 2013
சென்னை::ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிப்பில் ரவி கே. சந்திரன் இயக்கத்தில்
ஜீவா, துளசி நடிக்கும் ‘யான்’ படத்தில் பாடல்கள் அமெரிக்காவில் உருவாக இருக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்த ‘கோ ’ படத்தின் பாடல்களை விட இந்த படத்தின் பாடல்களை ஹிட் ஆக்கும் விதத்தில் உருவாக்கப் போவதாக ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
புதுமையான சில வாத்திய கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ள ஹாரிஸ் இப்படத்திற்காக அமெரிக்காவில் உள்ள பிரபல ‘ராப்’ [RAP] பாடகர்களையும் பயன்படுத்த உள்ளார்.
பாடல்களை உருவாக்குவதற்காக இசையமைப்பாளர் ஹாரிஸ், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குனர் ரவி கே. சந்திரன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதன் பின் சொகுசு கப்பலான ‘க்ரூஸ்’ கப்பலிலும் தங்கியிருந்து ‘யான்’ படத்திற்கான பாடல்களை அமைத்து பின்னர் திரும்புகின்றனர்.
‘யாவரும்’ ரசிக்கிற மாதிரியான பாடல்களோட வாங்க…..
Comments
Post a Comment