Monday,29th of April 2013
சென்னை::இந்தி பட இயக்குநர் பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'மரியான்' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் டீசர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இவை அனைத்துமே மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் 50 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கி தனுஷ் மீன்பிடிப்பது போன்ற டீசர் வெளியானது. அந்த டீசரை பல லட்சம் மக்கள் இணையதளத்தில் பார்த்திருந்தனர். அதையடுத்து தற்போது பாடல் டீசர் ஒன்று சமீபத்தில் வெளியானது.
'நெஞ்சே எழு...' என்று தொடங்கும் இந்த பாடல் மற்றும் அதை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் என அனைத்திலும், ரசிகர்களை கவர்ந்திருக்கும் இந்த டீசரை இதுவரை 2.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Comments
Post a Comment