சூர்யாவுடன் இணைந்து குத்து பாடலுக்கு நடனமாடிய அஞ்சலி!!!

Tuesday,30th of April 2013
சென்னை::சிங்கம் 2 படத்துக்காக சூர்யாவுடன் இணைந்து குத்து பாடல் ஒன்றுக்கு நடிகை அஞ்சலி நடனமாடினார்.
 
சிங்கம் படத்திற்கு பிறகு சூர்யா-ஹரி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் சிங்கம் 2. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுக்ஷா, ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து இப்போது சிங்கம் 2 படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான குத்து பாடல் ஒன்று படமாக்கப்படுகிறது.
 
இந்தப் பாடலில் சூர்யாவுடன் இணைந்து அஞ்சலி ஆட்டம் போட்டிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு பின் முதன் முறையாக தமிழகம் வந்து நடித்துள்ளார் அஞ்சலி. இதைத்தொடர்ந்து அவர் ‘போல்பச்சன்‘ படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

Comments