Thursday,4th of April 2013
சென்னை::அப்பா கமல் இயக்கும் படத்தில் நடிக்கவில்லை என்றார் ஸ்ருதிஹாசன்.‘பிட்டர் சாக்லெட்‘ என்ற படத்தை கமல்ஹாசன் எழுதி இயக்கி நடிக்கிறார். இப்படத்தில் அவருடன் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இது பற்றி ஸ்ருதியிடம் பலர் கேட்டனர். அதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதில் அளித்திருக்கிறார். ‘இப்போதைக்கு 6 படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து புதிய படம் நடிக்க முடிவு செய்தாலோ அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலோ அதையும் தெரிவிப்பேன். அப்பா இயக்கும் ‘பிட்டர் சாக்லெட்Õல் நான் நடிக்கவில்லை. இந்த படத்தில் நடிக்காததால் ஒரு வகையில் வருத்தப்படுகிறேன். அதேசமயம் இப்படத்தை அப்பா இயக்குகிறார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரபுதேவா இயக்கும் ராமைய்யா வஸ்தாவய்யா இந்தி படத்தில் நடித்து வருகிறேன். பிரபுதேவாவின் நடனத்துக்கு நான் ரசிகை. அவரது இயக்கத்தில் நடிப்பது பெருமை. இந்த படம் பாலிவுட்டில் எனக்கு நிலையான இடத்தை பெற்றுத் தரும்Õ என்று ஸ்ருதி குறிப்பிட்டிருக்கிறார்.
Comments
Post a Comment