முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்!!!

Tuesday,16th of April 2013
சென்னை::நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் புதிய படம் ஒன்றில் காமெடி செய்ய இருக்கிறார்.
 
ரஜினி, விஜய்,
அஜீத், சூர்யா, என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருப்பவர் விவேக். இப்படி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த விவேக்கிற்கு எட்டா கனியாக ஒன்று இருந்தது. அது வேறு ஒன்றுமில்லை அவர் இதுவரை கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை என்பதுதான்.
 
தற்போது அதுவும் கூடிய சீக்கிரம் நிறைவேற இருக்கிறது. விரைவில் கமல்ஹாசன்-விவேக் கூட்டணி புதிய படம் ஒன்றில் கைகோர்க்கிறது. இதனை அண்மையில் நடைபெற்ற பிரஸ் மீட் ஒன்றில் உறுதிப்படுத்தியிருக்கிறார் கமல்.
 
விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு கமல் இயக்கும் புதிய படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கமல்-விவேக் கூட்டணி இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.  

Comments