Wednesday,17th of April 2013
சென்னை::அறுவா, வெட்டு கொத்து, மதுரை தாதா என்று தமிழ் சினிமா வெடித்துக்கொண்டிருந்த நேரத்தில், 'சொல்லாமலே', 'பூ', 'ரோஜா கூட்டம்' உள்ளிட்ட மென்மையான காதல்ப் படங்களை கொடுத்து கோடம்பாக்கத்தில் அமைதியை ஏற்படுத்திய இயக்குநர் சசி, என்ன யோசித்தாரோ, ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
அதுவும் சாதாரண ஆக்ஷன் அவதாரம் இல்லை, ஹீரோ மூன்று கெட்டப்புகளுடன் தோன்றும் பயங்கரமான ஆக்ஷன் அவதாரம். 'ஐந்து ஐந்து ஐந்து' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் பரத் தான் ஹீரோ. அந்நியன் போல முடிவைத்த ஒரு கெட்டப், மொட்டை தலை கெட்டப், சாதரணமான கெட்டப் என்று மூன்று கெட்டப்புகளில் நடித்திருக்கும் பரத் இப்படத்திற்காக சுமார் மூன்று வருடங்கள் உழைத்திருக்கிறார். அவருடைய உழைப்பு அந்த சிக்ஸ் பேக்கிலே தெரிகிறது.
சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. இதில் இயக்குநர் ஷங்கரும், நடிகர் தனுஷும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார்கள்.
பாடல்கள் வெளியீட்டுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் சசி, "என்னிடம் அனைவரும், மென்மையான காதல் படங்களை எடுத்துக்கொண்டிருந்த நீங்கள், ஆக்ஷன் சப்ஜட்டுக்கு மாறினீர்கள் என்று கேட்கிறார்கள். காதல் படங்களையே எடுத்துக்கொண்டிருந்தால், ஏன் தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களை எடுக்கிறீர்கள் என்று கேட்டுவிடுவீர்களோ என்று எண்ணி தான், இதுபோன்ற ஆக்ஷன் சப்ஜக்ட்டுக்கு மாறினேன். ஆக்ஷன் படமாக இருந்தாலும், இப்படத்தில் ஒரு அறுமையான கதை உள்ளது. என்றும் என்னுடைய தரத்தை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்." என்று கூறியவரிடம், கமர்ஷியன் சினிமாவுக்கு வரவேண்டும் என்பதற்காகதான் இப்படிப்பட்ட படம் எடுக்க முன்வந்தீர்களா? என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் கிடையாது. எப்போதும் மென்மையான காதல் படத்தை எடுத்த நான், தற்போது ஒரு ஆக்ஷன் காதல் கதையை படமாக்கியிருக்கிறேன்.
நான் ஆக்ஷம் படம் எடுக்கிறேன் என்றதுமே, அவருக்கு பல கேள்விகள் எழுந்திருக்கும், படம் எப்படி வரும் என்றெல்லாம் யோசித்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் படம் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு படம் இருக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த ஆண்டுகள் எடுத்துக்கொண்டேன். ஹீரோயிசம் என்றால் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆகிவிட்டது. அப்படி ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக யோசித்து இந்த படத்தில் செய்திருக்கிறேன்." என்று பதில் கூறினார்.

Comments
Post a Comment