Monday,22nd of April 2013
சென்னை::ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன் சார்பில் உருவாகியுள்ள படம் ‘அன்பா அழகா’ இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.
ஆடியோவை இயக்குநர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டார். நடிகர் விமல் பெற்றுக் கொண்டார்.
விழாவில் இயக்குநர் எஸ்.சிவராமன் பேசும் போது “சின்ன பட்ஜெட் படமென்ற போதும் இவ்வளவு பேர் வந்ததற்கு நன்றி. பொதுவாக பத்திரிகைகள் சின்ன படம் புதுமுகங்கள் படம் என்றால் செய்தி போடுவதில்லை. விமர்சனம் எழுதுவதில்லை.
புதிய படத்தைப் பாருங்கள் நல்லா இருந்தால் நல்லா இருக்குன்னு எழுதுங்க இல்லைன்னா நல்லா இல்லைன்னு எழுதுங்க எதுவுமே எழுதாமல் இருப்பது நியாயமா? ” என்று கேட்டார். அதுமட்டுமல்ல இந்தப் படத்துக்கு ஒரு பாட்டு பாடித் தருமாறு சிம்புவிடம் கேட்டேன். ட்யூன் நல்லா இருந்தால் பாடுகிறேன் என்றார் கறாராக, ட்யூனைக் கொடுத்தேன். பிடித்து இருந்தது. உடனே பாடிக் கொடுத்தார். ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை எஸ்டிஆர். நட்பை மதிப்பவர் எஸ்.டி.ஆர் ” என்றார்.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அருள் முருகன், நாயகன் ஆகாஷ் பிரபு, நாயகி ப்ரீத்தி ஆகியோரும் பேசினார்கள்...
சிம்புவுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பம்!!!
சிம்பு திருமணத்துக்கு தயாராகி வருகிறார்.
ஒரு சமயத்தில் நயன்தாராவை காதலித்து வந்த சிம்பு அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் தன்னுடைய முழு கவனத்தையும் படங்களில் செலுத்தி வந்தார். இடையில் வேறு எந்த காதல் கிசுகிசுவிலும் சிக்காத அவர் இப்போது திருமணத்துக்கு தயாராகிவிட்டார்.‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ என இரண்டு படங்களில் நடித்து வரும் சிம்பு இதனையடுத்து ‘மன்மதன் 2’ம் பாகத்தை இயக்கி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து கேட்டால், பதில் சொல்லாமல் சிரிக்கிறார். தவிர, பிரபல நாயகியுடன் இணைத்து வரும் கிசுகிசு பற்றி கேட்டபோது, அதற்கு மட்டும் வாயைத் திறந்தார். இதற்குமுன் என்னையும், சில நடிகைகளையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ஆனால், அனைத்தும் பொய்யாகி விட்டது. அப்பாவும், அம்மாவும் எனக்கு மணப்பெண் தேடும் விஷயத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்வேன். எனக்கு திருமணம் இந்த வருடமா, அடுத்த வருடமா என்று விரைவில் தெரியும் என்றார். வேலூரில் மணப்பெண் கிடைத்திருப்பதாக வந்த தகவல் குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டார்
Comments
Post a Comment