பிரியாணி’ ஷுட்டிங் ஆரம்பமானது!!!

Wednesday,3rd of April 2013
சென்னை::வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி , ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்கும் ‘பிரியாணி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில்  ஆரம்பமானது.
 
தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை என்றும், அதனால்தான் கார்த்தி,  ராஜேஷ் இயக்கத்தில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடிக்கப் போய் விட்டார் என்றும் சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது.
 
ஆனால், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தினர் இதை மறுத்தனர். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடத்த முடிவெடுத்தாகத் தெரிவத்தனர்.
 
இதைத் தொடர்ந்து ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படப்பிடிப்பு ஆரம்பமானது. இப்போது, அந்த படத்திற்கு சிறிது பிரேக் விட்டு  ‘பிரியாணி’ படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
 
விரைவில் ‘பிரியாணி’ படத்தின் இசை வெளியீடும் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Comments