சுவிட்சர்லாந்து செல்கிறது 'என்றென்றும் புன்னகை' படக்குழு!!!

Tuesday,16th of April 2013
சென்னை::ஜீவா நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் 'என்றென்றும் புன்னகை'.
 
அஹமது இயக்கும் இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து வினய், ஆண்ட்ரியா, சந்தானம் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் காட்சியை வெளிநாட்டில் சென்று படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
 
இதற்காக அவர்கள் விரைவில் சுவிட்சர்லாந்து செல்கின்றனர். அங்கு ரொமாண்டிக்கான பாடல் காட்சி ஒன்றை படமாக்க இருக்கின்றனர். அதனைத்தொடர்ந்து படத்தின் சில காட்சிகளை பிரான்ஸிலும் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
 
தலைவா படப்பிடிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள சந்தானம் திரும்பியவுடன் படக்குழு வெளிநாடு பறக்க இறக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஜீவா, 'என்றென்றும் புன்னகை' திரைப்படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறார்.

Comments