Friday,5th of April 2013
சென்னை::தமிழ், தெலுங்கு, மலையாளம் என, மூன்று மொழிகளிலும், ரவுண்டு கட்டி அடிக்கிறார், அமலா பால். மூன்று மொழிகளிலுமே, தொடர்ச்சியாக படப் பிடிப்புகளில், பங்கேற்க வேண்டியிருப்பதால், உள்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும், அவ்வப்போது, விமானத்தில் பறப்பது, அவருக்கு வாடிக்கையாகி விட்டது.தெலுங்கு படப் பிடிப்புக்காக, சமீபத்தில், ஸ்பெயினுக்கு சென்றிருந்த அமலா பால், அந்த படப் பிடிப்பை முடித்து விட்டு, தமிழ் படப் பிடிப்பில் பங்கேற்பதற்காக, அங்கிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு, விமானத்தில் பயணித்தார்.அதே விமானத்தில், நடிகர் சந்தானமும் பயணித்தாராம். விமான பயணம் போரடிக்குமே என நினைத்துக் கொண்டிருந்த, அமலா பாலுக்கு, சந்தானத்தை பார்த்ததும், அந்த கவலை மறந்து விட்டதாம். அப்புறம் என்ன? இருவரும், ஜாலியாக, ஒருவரை ஒருவர், கலாய்த்தபடியே, விமானத்தில் பயணிக்க, நேரம் போனதே தெரியவில்லையாம்.
Comments
Post a Comment