சென்னை::மாற்றான்’ படத்திற்குப் பிறகு கே.வி. ஆனந்த், புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கப் போகிறார். ஒவ்வொரு படத்திலும் விதவிதமான ஹீரோயின்களுடன் ஜோடி சேர ஆசைப்படும் ஆர்யாவுக்கு தமன்னாவுடன் ஜோடியாக நடிக்க ஆசையாம்.
அதனால், இயக்குனர் கே.வி. ஆனந்திடம் , தமன்னாவை ஹீரோயினாக நடிக்க வைக்கலாம் என சொன்னதாகத் தெரிகிறது.
கே.வி. ஆனந்த்தும் அதற்கு சம்மதித்து விட்டாராம். ஏற்கெனவே, இவர் இயக்கிய ‘அயன்’ படத்தின் மூலம்தான் டாப் ஹீரோயின்களில் ஒருவரானார் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.
தமன்னா ஹிந்தியில் நடித்த ‘ஹிம்மத்வாலா’ படு தோல்வி அடைந்ததை அடுத்து ரொம்பவே அப்செட்டாகி விட்டாராம். அஜித் ஜோடியாக நடிக்கும் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.
அப்படியே ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து விட்டால் தமிழில் விட்ட இடத்தைப் பிடித்து விடலாம் என நினைக்கிறார்.
எப்படியோ, ஆர்யாவுக்கு ஒரு புது ஜோடி கிடைச்சாச்சி…..
Comments
Post a Comment