Thursday,25th of April 2013
சென்னை::விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்து வந்த அஜீத், அப்படத்தை முடித்து விட்டு, இப்போது, "சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இறங்கி விட்டார். தற்போது, ஆந்திராவில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்துக்கான முதல் நாள் படப்பிடிப்பு துவங்கப்பட்ட போது, டைரக்டர் சிவா, அஜீத்திடம் "முதல் ஷாட்டில் சென்டிமென்ட்டாக நீங்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்றாராம்.ஆனால், அஜீத்தோ, "என்னை வைத்து, அப்புறம் கூட எடுத்துக் கொள்ளலாம். முதலில் விதார்த் போன்ற, வளர்ந்து வரும் ஸ்டார்களை வைத்து முதல் ஷாட்டை எடுங்கள் என்றாராம். அதைக் கேட்ட விதார்த் மனம் நெகிழ்ந்து போனாராம். ஓடிச்சென்று அஜீத்தை கட்டிக் கொண்டு, "உங்க மனசு யாருக்கும் வராது என்றாராம்.
Comments
Post a Comment