Thursday,25th of April 2013
சென்னை::* முதன்முறையாக மைதானத்துக்கு சென்று நேரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்த அனுபவம் மறக்க முடியாது என டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் டாப்ஸி. ஆர்யாவும் உடன் சென்றாராம்.
* பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதேவி சென்னை நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுத்தார். தன்னுடன் 80களில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு இதில் அழைப்பு விடுத்திருந்தார். ரஜினி, ராதிகா, குஷ்பு, பூர்ணிமா, ஜெயசித்ரா உள¢ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
* ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை‘ படத்தில் நடிக்க சந்தானத்திடம் டைரக்டர் சேரன் கால்ஷீட் கேட்டபோது அப்படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது அம்மா கூறியதால் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிக்க ஒப்புக்கொண்டார் சந்தானம்.
* ‘ஐ‘ படத்தின் பெரும்பகுதி முடிந்த நிலையில் திடீரென்று உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் கூறியதை ஏற்று நவீன பயிற்சி மூலம் உடலை மெலிதாக்க¤ சமீபத்தில் சீனா சென்றார் விக்ரம்.
* ‘மண்பானை‘ என்ற குறும்படத்தை இயக்கிய பாண்டியராஜனுக்கு அமெரிக்காவில் நடந்த ஹைபல்ப் என்ற திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது.
* 2013ம் ஆண்டு ஜனவரி 1ல் தொடங்கி ஏப்ரல் 19ம் தேதி வரை 53 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. இது புதிய ரெக்கார்டு. வழக்கமாக மே மாதம் அல்லது ஜூன் முதல் வாரத்தில்தான் 50 படங்கள் ரிலீஸ் எண்ணிக்கையை நெருங்குமென தெரிவிக்கிறது கோலிவுட்.
* கமல் நடிக்கும் படத்தை இயக்க பேசி வருகிறார் லிங்குசாமி. இந்த ஆண்டு இறுதியில் இதற்கான பணி தொடங்கும் என்று தெரிகிறது. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஸ்பெஷல் 26’ ரீமேக் உரிமையை லிங்குசாமி பெற்றிருக்கிறார். இப்படத்தை கமலை வைத்து இயக்க எண்ணி உள்ளதாக தெரிவித்தார். ஆனால் ரீமேக் படத்தில் நடிக்க கமல் விரும்பவில்லையாம்.
* ‘கோச்சடையான்‘ படத்தில் நடித்த அனுபவம் பற்றி பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் கூறும்போது இப்படம் கேப்சர் 3டி தொழில் நுட்பத்தில் உருவாவதால் வயர் இணைப்புகளுடன் உடைகளை அணிந்து நடித்ததாக தெரிவித்தார்.
* வித்யாபாலன், பாலிவுட் பட அதிபர் சித்தார்த் ராய்கபூரை மணந்ததையடுத்து தனது பெயரை வித்யாபாலன் ராய்கபூர் என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.
* ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ‘சண்டி டோலிவுட் படத்தில் நடிக்கும் பிரியாமணி அடுத்து நடிக்கும் அங்குலிகா என்ற படமும் ஹீரோயினை மையமாக கொண்ட கதை. இந்நிலையில் மலையாளத்தில் இயக்குனர்கள் கமல், அனில் தாஸ் இயக்கும் 2 படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது.
* ‘இங்க என்ன சொல்லுது‘ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விடிவி கணேஷ். செல்வா டைரக்ட் செய்யும் இப்படத்தில் சந்தானமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
* ‘கோச்சடையான்‘ படத்தில் வைரமுத்து எழுதிய ‘எதிரிகள் இல்லை‘ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் சொந்த குரலில் பாடி இருக்கிறார் ரஜினி. ஏற்கனவே மன்னன் படத்தில் அடிக்குது குளிரு என்ற பாடலை இளையராஜா இசையில் ரஜினி பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
* தமிழில் வெளியான ‘திருட்டு பயலே‘ படத்தை ‘ஷார்ட் கட் ரோமியோ‘ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் சுசிகணேசன். இப்படம் மே மாதம் நடக்கவுள்ள 66வது கேன்ஸ் பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
Comments
Post a Comment