மறுபிரவேசம் செய்யவிருக்கும் வடிவேலுக்கு ஜோடிபார்வதி?!!!

Saturday,27th of April 2013
சென்னை::மறுபிரவேசம் செய்யவிருக்கும் வடிவேலு, "தெனாலிராமன்  படத்தில் நடிக்கிறார். இதில், அவருக்கு  இரண்டு வேடமாம். இப்படத்தில், வடிவேலுக்கு ஜோடியாக, முன்னணி நடிகைகளை நடிக்க வைக்கும் முயற்சி நடந்தது. எதிர்பார்த்த சில நடிகைகள் சிக்கவில்லை. ஆனாலும்"பில்லா-2 வில் அஜீத்துடன் நடித்த, மலையாள நடிகை பார்வதி ஓமனக்குட்டன், வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க, ஒப்புதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. "பார்வதிக்கு, "பில்லா-2வுக்கு பின், தமிழில் வாய்ப்பு இல்லை. இந்த காமெடி படமாவது, அவருக்குகை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான், பார்க்க வேண்டும் என, கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையே, இந்த படத்தில் பார்வதி நடிப்பது, இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், கூறப்படுகிறது.

Comments