Monday,22nd of April 2013
சென்னை::அஜீத் படத்தின் தலைப்பு 'வலை' கிடையாது என்று இயக்குனர் விஷ்ணுவர்த்தன் தெரிவித்துள்ளார்.
பில்லா' திரைப்படத்திற்கு பிறகு அஜீத் - விஷ்ணுவர்த்தன் கூட்டணி மீண்டும் புதிய படம் ஒன்றில் கைகோர்த்திருக்கிறது. இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ந
யன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அஜீத் அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். இருப்பினும் படத்துக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் ரசிகர்களே ஒரு முடிவுக்கு வந்து, 'வலை' என பெயர் சூட்டிவிட்டனர். படத்தின் டிசைன் கூட வெளியானது.
இதனிடையே படத்தின் தலைப்பு 'வலை'தான் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என விஷ்ணுவர்த்தன் ஒரு குண்டை தூக்கி போட்டிருக்கிறார். படத்தின் தலைப்பு 'வலை' கிடையாது என்பதை உறுதிபட தெரிவித்துள்ள அவர் படத்திற்கு இரண்டு தலைப்புகளை யோசித்து வைதுள்ளளோம் என்று கூறியுள்ளார். எனவே அதில் ஒரு தலைப்பையே தேர்வு செய்வார்கள் எனத் தெரிகிறது.
மேலும் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அஜீத் பிறந்த நாளன்று அதாவது மே 1ம் தேதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment