Sunday,14th of April 2013
சென்னை::சிங்கம்-2 படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா, கவுதம் மேனன் படத்திலும், அடுத்து லிங்குசாமியின் படத்திலும் நடிப்பது உறுதியாகியுள்ளது. மாற்றான் படத்தின் சறுக்கலுக்கு பிறகு நடிகர் சூர்யா நடித்து வரும் படம் சிங்கம்-2. சிங்கம் பட முதல்பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2ம் பாகமாக உருவாகி வருகிறது. ஹரி இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். இன்னொரு ஒரு சிறிய ரோலில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இதற்கு அடுத்து சூர்யா, கவுதம் மேனன் அல்லது லிங்குசாமி படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இருவரது படத்திலும் சூர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. இதில் முதலில் சூர்யா நடிக்க இருப்பது கவுதம் மேனன் படத்தில் தான். கவுதம் மேனன் தனது போட்டான் கதாஸ் சார்பில் இயக்கி, தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸில், லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது.

Comments
Post a Comment