அமிதாப்பச்சனிடம் விருது பெற்றது பெருமை: நயன்தாரா பேட்டி!!!

Saturday,13th of April 2013
சென்னை::நயன்தாராவுக்கு ஆந்திர அரசு நந்தி விருது வழங்கியுள்ளது. ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் விழாவில் பங்கேற்று நயன்தாராவுக்கு விருதை வழங்கினார். இது குறித்து நயன்தாரா அளித்த பேட்டி வருமாறு:-

ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நடித்ததற்காக நந்தி விருது கிடைத்துள்ளது. இது நான் வாங்கும் முதல் நந்தி விருது என்பதால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். அமிதாப்பச்சன் கையால் இந்த விருதை பெற்றது பெருமையாக இருக்கிறது.

அமிதாப்பச்சன் என்னை மிகவும் கவர்ந்தவர். எனது மரியாதைக்கு உரியவர். அமிதாப்பச்சனிடம் இருந்து நான் விருது வாங்கியதை எனது தாய் கேள்விப்பட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். விருதையும் சான்றிதழையும் வாங்கி விட்டு வந்த போது பட்ட மளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவனின் மன நிலையில் இருந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நயன்தாரா தற்போது அஜீத்துடன் வலை, ஆர்யாவுடன் ராஜாராணி, உதயநிதி ஜோடியாக இது கதிர்வேலன் காதலி போன்ற பங்களில் நடிக்கிறார். தனுஷ் தயாரிக்கும் எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். நாகார்ஜுனாவுடன் நடித்த கிரீக் வீருடு படம் வருகிற 26-ந்தேதி தமிழ், தெலுங்கில் ரிலீசாகிறது.
tamil matrimony_INNER_468x60.gif

Comments