ஜில்லா’ ஆரம்பமான கதை!!!

Saturday,20th of April 2013
சென்னை::விஜய், மோகன் லால், காஜல் அகர்வால் நடிக்க இமான் இசையமைப்பில் நேசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜில்லா’.
பொதுவாக, விஜய் சமீப காலங்களில் அதிகமாக அறிமுகமில்லாத இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில்லை. ஆனால், ‘ஜில்லா’ படத்தை அதிக பரிச்சயமில்லாத நேசன் இயக்குவதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
 
நேசன் இதற்கு முன் ‘முருகா’ என்ற படத்தை இயக்கியவர். விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படத்தில் இணை இயக்குனராகப் பணி புரிந்தவர்.
‘வேலாயுதம்’ படப்பிடிப்பின் கடைசி நாளில் அனைத்து உதவி இயக்குனர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அனைவரையும் தனக்குப் பொருத்தமான கதை இருந்தால் சொல்லச் சொல்லியிருக்கிறார் விஜய்.
அப்படி அவர் கேட்ட கதைகளில் ஒன்றுதான் நேசன் சொன்ன ‘ஜில்லா’ கதை.
இப்படித்தான் நேசனுக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாம்.
எப்படி படம் கிடைச்சா என்ன, ‘ஜில்லா’வை ‘நல்லா’ பண்ணுங்க நேசன்….

Comments