Tuesday,2nd of April 2013
சென்னை::பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் "யான். இப்படத்தில் ஹீரோவாக ஜீவாவும், ஹீரோயினாக கடல் துளசியும் நடிக்கின்றனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய படத்தின் டைரக்டர் ரவி.கே.சந்திரன், யான் படத்தின் கதை முழுக்க முழுக்க அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் செய்திகள் படத்தின் கதை. இப்படத்தில் நடிக்க, நடிகை தேடிய போது, டைரக்டர் மணிரத்னம் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் தான் துளசியை சிபாரிசு செய்தனர். அவர்கள் கூறியதை தொடர்ந்து துளசியை, ஜீவாவுக்கு ஜோடியாக்கினேன். அவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார்.
படத்தின் ஹீரோ ஜீவா பேசும்போது, இந்த படத்தில் துளசி தான் ஹீரோயின் என்று தெரிந்ததும், அவரிடம் நான் போட்ட முதல் கண்டிஷன், என்னை அங்கிள் என்று அழைக்க கூடாது என்பது தான். காரணம், என் வயதில் பாதி வயது தான் துளசிக்கு. வயதில் தான் பாதி, ஆனால் நடிப்பு என்று வந்து விட்டால் என்னை மிஞ்சும் அளவுக்கு நடிக்கிறார். அங்கிள் என்று நான் சொல்லக்கூடாது என்றதும், துளசி என்னை ஜீவா ஜி என்று அழைத்தார், இதற்கு நீ பேசாமல் என்னை அங்கிள் என்று அழைத்திருக்கலாம் என்றேன். மேலும் அக்கா-தங்கை இருவருடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, கார்த்திகாவிடம் நடிப்பு, டான்ஸ் என்று எல்லாமும் இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பவும் கலகல என்று இருப்பார். அவர் ஒரு இண்டர்நேஷனல் நடிகை. துளசியை பொறுத்தமட்டில் நம்மூரு நடிகை என்று தான் சொல்ல வேண்டும். அவர் மணிரத்னத்தின் பள்ளியில் இருந்து வந்தால் நடிப்பதற்கு முன்பு தன்னை தயார்படுத்தி தான் நடிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment