நடிப்பில் எந்த அளவுக்கு ஆர்வமாக இருக்கிறாரோ அதைவிட பின்னணி பாடுவதில் அதிக ஆர்வமாக இருக்கிறார் ஆண்ட்ரியா!!!
Monday,29th of April 2013
சென்னை::நடிப்பில் எந்த அளவுக்கு ஆர்வமாக இருக்கிறாரோ அதைவிட பின்னணி பாடுவதில் அதிக ஆர்வமாக இருக்கிறார் ஆண்ட்ரியா. அதோடு எந்த பாடலை எடுத்துக்கொண்டாலும் அதிக ஈடுபாடு காட்டி பாடுவார். அதன்காரணமாக, தான் பாடும் ஒவ்வொரு பாடலையும் யார் எழுதினார், யார் அந்த பாடலுக்காக நடிக்கப்போகிறவர்கள் என்பதைகூட விலாவாரியாக கேட்டு தெரிந்து கொள்வது அவரது வழக்கமாம்.
அந்த வரிசையில், விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் என்ற பாடலை விஜய்யுடன் இணைந்து பாடியவர் ஆண்ட்ரியா. அப்பாடலை பாடி முடித்ததும் அதை எழுதியவர் மதன் கார்க்கி என்பதை கேட்டறிந்தவர், உடனே அவருக்கு போன் போட்டு பாடல் வரிகள் பிரமாதமாக இருப்பதாக கூறியதோடு, இந்த வரிகளுக்காகவே பாட்டு ஹிட்டாகும் என்றும் கருத்து சொன்னாராம். அதேபோல் அப்பாடலும் பெரிய ஹிட்டானது.
அதையடுத்து, சமீபத்தில் விரட்டு என்ற படத்தில் ஒரு பாடலை பாடிய ஆண்ட்ரியா, அதை எழுதியதும் மதன் கார்க்கிதான் என்பதை அறிந்து அவரிடம் வழக்கம்போல் போன் பண்ணி, பாடல் சூப்பராக உள்ளது என்று புகழ்ந்தவர், நீங்கள் எழுதி அந்த பாடலை நான் பாடினாலே அது ஹிட்தான். அந்த வரிசையில் இந்த படத்தின் பாடலும் ஹிட்டாகும் என்பதை இப்போதே என்னால் சொல்ல முடியும் என்று ஆரூடம் சொன்னாராம் ஆண்ட்ரியா.

Comments
Post a Comment