Friday,5th of April 2013
சென்னை::மறைந்த நாகி ரெட்டியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி, வெங்கட்ராம ரெட்டியின் நான்காவது தயாரிப்பில் அஜீத் குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் துவங்குகிறது.
அஜீத் குமார் ஜோடியாக தமன்னா நடிக்க , விதார்த் , பாலா, முனீஸ் , சுஹைல் ஆகியோருடன் சந்தானம் , ரமேஷ் கண்ணா, அப்பு குட்டி ,’ நாடோடிகள் ‘ அபிநயா , நந்தகி , வித்யு லேகா , தேவ தர்ஷினி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 20 ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் நடக்க உள்ளது .
இது முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படம் , எங்கள் நிறுவனத்தின் பாரம்பியத்திற்கு ஏற்ப மக்கள் ரசனைக்கேற்ப காட்சி அமைப்பு செய்து இருக்கிறார் இயக்குனர் சிவா. அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூரணமாக பூர்த்தி செய்யும் ‘ என்று பெருமையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், வெற்றி ஒளிப்பதிவில் , பரதன் வசனத்தில் , பூபதி ராஜா கதை அமைப்பில், காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பில் , தினேஷ் நடனம் அமைக்க , செல்வம் சண்டை காட்சிகளை அமைக்க , ரவிச்சந்திரனின் தயாரிப்பு நிர்வாகத்தில் உருவாகும் படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும்.
Comments
Post a Comment