எதிர்பார்ப்பை கிளப்பும் விஜயின் ஜில்லா!!!

Saturday,27th of April 2013
சென்னை::தலைவா படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் மே இரண்டாம் வாரத்திலிருந்து ஜில்லாவில் கவனம் செலுத்துகிறார் விஜய். 
 
ஜில்லா படத்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நேசன் படத்தை இயக்க விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். டி.இமான் இசை.
 
முதல்முறையாக இந்தப் படத்தில் விஜய்யுடன் மோகன்லால் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். மேலும் தம்பி ராமையா, சூரி ஆக்கியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இதுவரை விஜய் சூப்பர்குட் பிலிம்ஸ் பேனரில் நடித்த அனைத்துப் படங்களும் ஹிட் என்பதால் ஜில்லாவுக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

Comments