Thursday,4th of April 2013
சென்னை::நல்ல விஷயங்களை செய்யும் போது சில சமயம் ஆரம்பத்தில் அதிகமான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி வரும். இப்படி ஒரு எதிர்ப்பு தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன் அவர்களுக்கும் வந்துள்ளது.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சைத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி, கை கொடுக்கும் கை, ’ போன்ற படங்களை இயக்கியவர் மகேந்திரன்.
ரஜினிகாந்த் நடித்த படங்களில் இன்றும் பெரிதாகப் பேசப்பட்டு வரும் படங்களில் ‘முள்ளும் மலரும், ஜானி’ ஆகிய படங்கள் குறிப்பிட வேண்டியவை.
ஆரம்பத்தில் நாம் சொன்ன எதிர்ப்பு, ‘முள்ளும் மலரும்’ படத்திற்கு தான் எழுந்துள்ளது. இதைப் பற்றி வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது,
“முள்ளும் மலரும்’ படத்தை ரொம்ப ரசிச்சி ரசிச்சி, இழைச்சு எடுத்தேன். ஆனால், படத்தோட டபுள் பாசிட்டிவ் பார்த்துட்டு, படத்தோட தயாரிப்பாளர் வேணு செட்டியார் கன்னா பின்னானு திட்டினார். ‘அங்க ஒரு டயலாக், இங்க ஒரு டயலாக் இருக்கு. என் தலையில மண்ணை அள்ளிப் போட்டுட்டியேன்னாரு. அவரோ மகன் என்னை அடிக்கவே வந்தாரு.
ஆனால், படம் வெளியாகி மூணு வாரத்துக்கு அப்புறம் பிளாக்ல டிக்கெட் விக்கிற அளவுக்கு ஹிட் ஆச்சி. ஒரு பிளாக் செக் கொடுத்து எவ்வளவு வேணா எழுதிக்கன்னு தயாரிப்பாளர் சொன்னாரு. எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தீங்க, அதுவே எத்தனையோ கோடிக்குச் சமம், அது போதும்னு செக்கை திருப்பிக் கொடுத்துட்டேன். ரஜினிக்கு கிடைச்ச முதல் விருது இந்த படம் மூலமாத்தான்கறதுல எனக்கு டபுள் சந்தோஷம். அந்த ‘முள்ளும் மலரும்’ நினைவுகள் இன்னும் எனக்குள் சந்தோஷத்தை விதைச்சிட்டுதான் இருக்கு, ” என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment