அழகான காதல் படத்தில் நடிக்க ஆசை – காஜல் அகர்வால்!!!

Sunday,14th of April 2013
சென்னை::தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால்.ஹிந்தியில் இவர் நடித்து வெளிவந்த ‘ஸ்பெஷல் 26, தமிழில் இவர் நடித்து வெளிவந்த ‘துப்பாக்கி’ , தெலுங்கில் சமீபத்தில் வெளிவந்த ‘பாட்ஷா’ ஆகிய திரைப்படங்கள்  சூப்பர் ஹிட்டானதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
 
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அந்த மகிழ்ச்சியை பகிரிந்து கொண்டவர் தொடர்ந்து பேசுகையில்,
 
எனக்கு ஒரு அழகான முழுமையான காதல் படத்தில் நடிக்க ஆசை. ஆனால், இதுவரை அப்படிப்பட்ட கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை. ‘Before Sunrise,’ ‘ Before Sunset ‘, மாதிரியான காதல் படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறேன்.
தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், எனக்கு போர் அடிக்கவில்லை.  பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்,” என தெரிவித்துள்ளார்.
காஜல் தமிழில் தற்போது கார்த்தி ஜோடியாக ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் , விஜய் ஜோடியாக ‘ஜில்லா’ படத்திலும் நடித்து வருகிறார்.

Comments