Friday,5th of April 2013
சென்னை::மாபெரும் வெற்றிப் பெற்ற டெல்லி பெல்லி என்ற இந்திப் படத்தின் ரீமேக் தான் 'சேட்டை'. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் தெலுங்கு பதிப்புக்கு முதலில் வைத்த 'நாட்டி பாய்ஸ்' என்ற தலைப்பு தற்போது 'கிரேஸி' என்று மாற்றப்பட்டுள்ளது.
ஆரியா, ஹன்சிகா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் சேட்டை. கண்ணன் இயக்கி இருக்கும் இந்தப் படம் இன்று முதல் திரைக்கு வருகிறது. இந்நிலையில் 'சேட்டை' திரைப்படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிட இருக்கின்றனர். படம் தெலுங்கில் 'கிரேஸி' என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஆரம்பத்தில் 'சேட்டை' தெலுங்கிற்கு 'நாட்டி பாய்ஸ்' என்றுதான் பெயரிட்டிருந்தனர். தெலுங்கில் 'பேட் பாய்ஸ்' என்ற பெயரில் வெளியான 'அலெக்ஸ்பாண்டியன்' திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதைக் கண்டு பயந்து போன 'சேட்டை' படக்குழு 'நாட்டி பாய்ஸ்' பெயரை 'கிரேஸி' என்று திடீரென மாற்றம் செய்து இருக்கிறார்கள்.
மேலும் 'சேட்டை'யுடன் சேர்த்து 'கிரேஸி'யை வெளியிடுவதாக இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் 'கிரேஸி' வெளியீடு தள்ளிப் பொய் இருக்கிறது.

Comments
Post a Comment