Wednesday,17th of April 2013
சென்னை::முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று ஒரு பரபரப்பான திரையுலக காதல் ஜோடி பற்றிய செய்தி ஒன்றை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இவர்களிருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனரான பாலா படத்தில் நடித்தவர்கள்.
சரி…எதற்கு சஸ்பென்ஸ்…அந்த காதல் ஜோடி…யார் என்று சொல்லிவிடுவோம்…ஒருவர் அதர்வா. பாலா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘பரதேசி’ படத்தில் நடித்தவர்.
மற்றொருவர் ஜனனி ஐயர். பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர். (படத்தில் ஒருவருக்கொருவர் கையசைத்து ‘விஷ்’ பண்ணிக் கொள்பவர்கள்தான் ஜனனி ஐயர், அதர்வா)
இவர்களிருவருக்கும்தான் காதல் என அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், ஜனனி ஐயர் இந்த காதல் செய்தியை மறுத்துள்ளாராம்…
சரி…பொறுத்திருந்து பார்ப்போம்….
Comments
Post a Comment