Tuesday,16th of April 2013
சென்னை::பாலிவுட்டில், பல ஆண்டுகளுக்கு முன், ஜிதேந்திரா-ஸ்ரீதேவி நடித்த, "ஹிம்மத்வாலா படத்தின் ரீ-மேக்கில், ஸ்ரீதேவி நடித்த வேடத்தில், நடித்தார், தமன்னா. அப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தார்.ஆனால், படம் தோல்வியடைந்து தமன்னாவின் பாலிவுட் கனவை கலைத்துவிட்டது. இருப்பினும், "அடுத்து நடிக்கும், இந்தி படங்கள் மூலம், பாலிவுட்டில், ஒரு நிலையான இடத்தை பிடிக்காமல் விடமாட்டேன் என்று ஆவேசமாக கூறினாலும், மனதளவில் இந்தி சினிமா மீதான நம்பிக்கை தமன்னாவுக்கு குறைந்து விட்டது.அதனால், மறுபடியும் தமிழ், தெலுங்கு படங்களில் முழுவீச்சில் இறங்கி, முன்னணி இடத்தைப் பிடிக்க முயற்சித்து வருகிறார். குறிப்பாக, தமிழில் அஜீத், ஆர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்திருப்பதால், மீண்டும் புது எனர்ஜியுடன் கோடம்பாக்கம் கோதாவில் குதித்துள்ளார், தமன்னா.
Comments
Post a Comment