Wednesday,3rd of April 2013
சென்னை::ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் நடிக்க சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘கோச்சடையான்’. மீடியா ஒன் குளோபடல் என்டர்டெயின்மென்ட் , ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தின் டிரைலர் மதிப்பு மிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட இருப்பதாகத் தெரிகிறது.
பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள கேன்ஸ் நகரில் நடக்க இருக்கும் திரைப்பட விழாவில் மே 16ம் தேதி ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியாவின் முதல் ‘3டி மோஷன் கேப்சரிங்’ படமாக உருவாகி வரும் கோச்சடையான் திரைப்படத்திற்கு கே.எஸ். ரவிகுமார் இயக்கம் மேற்பார்வை செய்து வருகிறார். நாசர், ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற இருக்கும் ஒரு பிரத்யேக விழாவில் ரஜினிகாந்த் ‘கோச்சடையான்’ டிரைலரை அறிமுகம் செய்து வைக்கிறார். இதன் மூலம் கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் முதன் முறையாக பங்கேற்கிறார்.
இதனிடையே கோச்சடையான் படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை அட்மஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. தென்னிந்திய திரைப்படங்களுக்கான அமெரிக்க வர்த்தகம் இந்த படத்தின் மூலம் ஒரு புதிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் வெளியீட்டு உரிமை பெற பலத்த போட்டி நிலவுவதாகவும் தெரிகிறது.
அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் படத்தை மார்க்கெட்டிங் செய்யவும் அட்மஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இ
ந்த கோடைக் காலம் ‘கோச்சடையான்’ திருவிழாக் காலம்தான்
Comments
Post a Comment