Monday,15th of April 2013
சென்னை::விளம்பர வடிவமைப்பு என்பது சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சம். ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்க்கும் முதல்கட்டப் பணியை விளம்பர வடிவமைப்பு செய்கிறது. பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களும், சுவரில் ஒட்டப்படும் போஸ்டர்களும் இதில் முதலாவதாக வருகின்றன.
கணினி தொழில்நுட்பத்துக்கு முந்தைய காலகட்டங்களில் புகைப்படங்களை அப்படியே பயன்படுத்தியதை காண முடிகிறது. அருகில் இருக்கும் பக்த நந்தனார் படத்தின் விளம்பரத்தைப் பாருங்கள். புகைப்படத்தை அப்படியே பயன்படுத்தியிருப்பது தெரியும். பக்த நந்தனார் 1935ல் வெளியான படம்.
பக்த நந்தனார் போன்ற வடிவமைப்பில் புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் தவிர்த்து மற்ற பகுதிகள் கருமையடைந்து காணப்படும். 1944ல் வெளிவந்த ஹரிதாஸ் படத்தின் விளம்பரத்தில் புகைப்படத்தை பயன்படுத்தியிருந்தாலும் அதனை கட்அவுட் செய்து பயன்படுத்தியிருப்பதை காணலாம். சமீபகாலம்வரை இந்த பாணியே நிலுவையில் இருந்தது

வண்ணப் படங்கள் வர ஆரம்பித்த பிறகும் இந்த கட்அவுட் பாணியே தொடர்ந்தது. நடிகர்களின்
படங்களை கத்தரித்து அதனை தங்களின் கற்பனைக்கேற்ப வடிவமைக்க ஆரம்பித்தனர். படங்களின் பெயர்களும் கைகளாலே எழுதப்பட்டன. அடுத்த முயற்சியாக நடிகர்களின் முகங்களை ஓவியர்கள் அச்சு அசலாக அப்படியே வரைந்து போஸ்டர்களில் பயன்படுத்த ஆரம்பித்தனர். குறிப்பிட்டப் படத்தில் அந்த நடிகர் ஏற்றுக் கொண்ட கெட்டப்பை அப்படியே போஸ்டர்களில் கொண்டு வந்தனர். உபால்டு போன்ற விளம்பர டிஸைனர்களின் காலத்துக்குப் பிறகு கணினி விளம்பரத்துறையை ஆக்கிரமித்தது.
Comments
Post a Comment