சந்தானம் - காமெடியிலிருந்து குணச்சித்திரத்துக்கு!!!

Monday,15th of April 2013
சென்னை::நகைச்சுவை நடிகருக்கு மெயின் டிஷ் சிரிப்பு என்றாலும் குணச்சித்திரம் என்ற உப்பு இருந்தால்தான் பண்டம் ருசிக்கும். கவுண்டமணி பீல்டில் நிலைத்தது வெறும் சிரிப்பினால் மட்டுமல்ல. சின்னக்கவுண்டர், தாய் மாமன் போன்ற படங்களில் வெளிப்பட்ட அவரது குணச்சித்திர நடிப்பினாலும்தான். சரி, காமெடி மேட்டருக்கு ஏன் இத்தனை சீரியஸ் பில்டப். நேரா மேட்டருக்கு வந்திடுவோம்.

வெறுமனே காமெடி செய்து கொண்டிருந்த சந்தானத்தையும் குணச்சித்திர நடிகராக்கியிருக்கிறாராம் இயக்குனர் சசி.

மூன்று வருடம் ஸ்கிரிப்ட் எழுதி நான்கு வருடம் படப்பிடிப்பு நடத்துகிற சசி பூ படத்துக்குப் பிறகு இப்போதுதான் 555 என்ற படத்தை எடுத்திருக்கிறார். வழக்கமாக மென்மையான உணர்வுகளை கையாள்கிறவர் பரத்தை பாடிபில்டராக்கி வேறு தளத்தில் படத்தை எடுத்திருப்பது புகைப்படங்களிலும், பட ட்ரெய்லரிலும் தெரிகிறது.

இந்தப் படத்தில் சந்தானம் பரத்தின் அண்ணனாக வருகிறார். சிரிப்பைத் தாண்டி படத்தை நகர்த்துகிற குணச்சித்திர நடிகராகவும் சந்தானத்தை சசி பயன்படுத்தியிருப்பதாக கேள்வி. 555 மாதிரி ஊதித்தள்ளுகிறாரா பார்ப்போம்.

Comments